Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மல்லிகைப்பூ விலை கடும் சரிவு

மல்லிகைப்பூ விலை கடும் சரிவு

பூக்களின் விலை சரிந்துள்ள நிலையில் பறிப்பு கூலியும் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மகிழிப்பட்டி, உடையன்தோட்டம், செம்பகணம்பட்டி, மாயனூர், காட்டூர், செங்கல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தில் விரிச்சி, சின்ன ரோஜா, மல்லிகை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இவை கரூர் பூ மார்க்கெட், குளித்தலை, முசிறி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது பூக்களின் விலை குறைந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.450, செண்டுமல்லி ரூ.50, விரிச்சிப்பூ ரூ.80, சின்ன ரோஜா ரூ.120 என விற்பனையாகிறது. கடந்த மாதம் மல்லிகைப்பூ கிலோ ரூ.1500 வரை விற்பனையான நிலையில், தற்போது விலை சரிந்துள்ளதால் சாகுபடி செலவுக்கூட கட்டுப்படியாகாததோடு, பறிப்பு கூலிக்கு கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

முந்தைய செய்தி
ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ் நிகர லாபம் 15% உயர்வு
அடுத்த செய்தி
ரயிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதி - நீதிமன்றம் மறுப்பு

தொடர்புடைய செய்திகள்